Tuesday, August 12, 2008

சுதந்திர தின வாழ்த்துகள்

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

சுதந்திரம் இதற்கு பொருள் புறக்கட்டுப்பாடு அல்லது மேலாதிக்கம் இல்லாமை அல்லது சுய ஆளுமை. மேலோடு பார்த்தால் நாம் சுய ஆளுமையோடு எந்தவித புறக்கட்டுபாடும் இல்லாமல் வாழ்வதாகவே தெரிகிறது. ஆனால் கீழ் வரும் எனது சில எண்ணங்களை சற்று படியுங்கள்:

1. சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது, இது என்று முதல் வழக்கத்திற்கு வந்தது என்று யாருக்காவது தெரியுமா? ஆனால் இன்று இது தை மாதத்திற்கு மாற்றப்பட்டு விட்டது! காரணம் தெரியுமா? அல்லது மக்களின் கருத்துதான் கேட்கப்பட்டதா? மேலும் சித்திரை முதல் நாளன்று வழக்கமாக நடைபெரும் பஞ்சாங்கம் படித்தலுக்கும் தடைவிதிக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

2. உங்களுடைய குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், நிலம் மற்றும் வீட்டு மனை பதிவு, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் போன்றவற்றை பைசா செலவில்லாமல் உரிய நேரத்தில் நம்மால் வாங்க இயலுமா?

3. புற்றீசல் போல் தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடெங்கும் பெருகிவர அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை அப்படியே உள்ளதே அது ஏன் என்று நம்மால் கேட்கமுடிகிறதா?

4. புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட கோடிகணக்கில் செலவு செய்கிறதே அது எவ்வாறு என்று தெரிகிறதா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்?

5. நாம் உணவின்றி வாழ இயலாது, ஆனால் சமீபத்தில் விதை நெல் இல்லாமல் தேவையான உரம் இல்லாமல் விவசாயிகள் பட்ட துன்பம் ஏன்? இதனாலேயே உழவர்கள் தங்கள் நிலங்களை கட்டிட காடுகளுக்கு தாரைவார்த்தால் நாம் என்ன செய்ய இயலும்?

6. தொலைகாட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது காண்பிக்கபட்டது, இதனை பார்த்ததை தவிர வேறு என்ன செய்ய முடிந்தது நம்மால்?

அட என்ன இது வெறும் வெத்துவேட்டு அரசியல் பேசி என்னவாக போகுதுனு தான தோனுது? இந்த அரசியலையும் அரசியல்வாதிகளையும் உருவாக்குவது நாம்தான். நினைவில் கொள்க.

சாலையில் செல்லும்போது நாம் விரைவாக செல்லவேண்டும் என்பதற்காக சாலை விதிகளை மதிப்பதில்லை மற்றோருக்கு சிரமம் வந்தாலும் அதைபற்றி கவலையில்லை…

தவறாத மாத சம்பளம், குறைவில்லாத வாழ்வு, நல்ல ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இப்படி ஒரு வாழ்க்கை வாழும் நமக்கு நாடும் மக்களும் எப்படிபோனால் என்ன? அரசு எப்படியிருந்தால் என்ன அல்லது அரசியல்வாதிதான் எப்படி இருந்தால் என்ன? என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது பெரும்பாலான மக்களுக்கு. இது இன்றைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் இந்த நிலை நீடிக்கும் எனில் நம் மகன் அல்லது மகளின் வாழ்க்கை என்னவாகும்?

இதோட இப்போதைக்கு நிறுத்திக்கறேன், இன்னும் நிறைய சொல்லனும்னு ஆசைதான் ஆனால் ரொம்ப சொன்னோம்னா அது நம்ம மண்டைக்கு ஏறாது. அதனால மற்றதை பிறகு பார்ப்போம்.

இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் மேல் சொன்னவை எல்லோருக்கும் பொருந்தாது, இன்றும் பல நல்ல உள்ளங்கள் நாட்டில் இருப்பதால்தான் ஓரளவிற்காவது மழை பெய்கிறது.